11 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பொருத்தவரையில் மார்ச் மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நாட்களில் நடத்த வேண்டும் என இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கும் பொது தேர்வுக்கும் மிக நெருக்கமாக இருக்கக்கூடிய காரணத்தால் எழுத்து தேர்வுக்கும், செய்முறை செய்முறை தேர்வுக்கும் போதுமான இடைவெளி வேண்டும் என்ற காரணத்தினால் செய்முறை தேர்வுகள் முன்கூட்டியே வைக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேதிகளில் பள்ளிகள் தங்களுக்குரிய  விருப்பத்திற்கு ஏற்ப இயற்பியல் வேதியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறை தேர்வை நடத்தலாம்.

எனவே மாணவர்கள்  கவனமான இடைவெளியை பயன்படுத்தி பொதுத்தேர்வுக்கு நன்றாக தயாராக வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட பொது தேர்வு செய்முறை தேர்வுக்கு பதிலாக மாற்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.