பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் விற்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தவறான தொலைபேசி எண் மற்றும் தவறான மாவட்ட விவரங்களைக் கொண்டு சமூக விரோதிகள் மாணவர்களின் விவரங்களை மாற்றி அமைத்து வெளியிட்டதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.