அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மார்ச் 1ஆம் தேதி இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.