அதிமுக காணாமல் போகும் என்று கூறிய பலர் காணாமல் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை கூறுகிறார். காணாமல் போனால் கண்டுபிடித்து தரலாம், அவர் போலீஸ் தானே என கிண்டல் அடித்த இபிஎஸ், அதிமுகவை அழிக்க நினைத்த எவரும் வென்றதாக வரலாறு இல்லை என்றார். பாஜகவுக்கு வந்து ஐந்து வருடம் கூட ஆகாது அண்ணாமலை, அரசியலுக்கு குழந்தை என்றும் தெரிவித்துள்ளார்.