மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா, சிம்பு, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தக் லைப் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 5 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்தது.

இந்த நிலையில் தக் லைப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மே 16-ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் எல்லையில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக இசை வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.