
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்த நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதால் இதற்கு அவ்வப்போது இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வந்த நிலையில் இது தீவிர போராக மாறும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று போர் முடிந்து விட்டது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனை மத்திய அரசும் உறுதிப்படுத்திய நிலையில் தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது பற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அவர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த தாக்குதலின் போது மசூதிகள் அழிக்கப்பட்டதோடு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். சிந்து நதிநீர், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன். எங்களுடைய நம்பிக்கையான நண்பன் சீனாவுக்கு நன்றி. பாகிஸ்தானுக்கு தேவை ஏற்படும் போது சீனா தான் உதவி செய்கிறது. மேலும் நான் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.