காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு 75 வயது ஆகும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் பாதிப்பினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை அவருடைய உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த நிலையில் உயிரிழுந்து விட்டார். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தனது பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுதல் கூறியுள்ளார்.