தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ் பவர் இசைஞானி இளையராஜா. இவருடன் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக வயலின்ஸ்டாக பணிபுரிந்தவர் ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன். இவருக்கு தற்போது 91 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக சென்னையில் கடந்த 5-ம் தேதி காலமானார். இவர் தனக்கு 12 வயது இருக்கும் போது வயலின் கற்றுக் கொள்வதற்காக புகழ்பெற்ற பரூர் சுந்தரம் ஐயரிடம் சீடராக சேர்ந்த நிலையில் 30 வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

இவர் அன்னக்கிளி யிலிருந்து மகாநதி, மௌன ராகம், புன்னகை மன்னன் மற்றும் அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ள நிலையில் தற்போது அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் குடியரசுத் தலைவர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்களிடமிருந்து விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.