பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் காவலர் ஒருவர் பணியின் போது மது குடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிகாரியா நகரில் ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பகிரா பிரசாத் என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காவல் நிலையத்தில் வைத்தே பணி நேரத்தில் மது அருந்தியுள்ளார். இது  தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் மது குடித்தது உண்மை என தெரிய வந்தது. மேலும் இதைத் தொடர்ந்து தற்போது அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.