அமெரிக்காவில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவின் கேளிக்கை பூங்காவிற்கு டயர் சாம்ப்சன் என்ற சிறுவன் சென்றிருந்தார். அப்போது Free Fall டவரில் இருந்து தவறி விழுந்து டயர் சாம்ப்சன் உயிரிழந்தார். இது தொடர்பாக டயர் சாம்ப்சனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. பூங்கா நிர்வாகம் டயர் சாம்ப்சனின் பெற்றோர் இருவருக்கும் தலா 1312 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.