
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13, 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஆறாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட இருந்தது. இது குறித்த தகவல் வெளியானதுமே பொங்கல் விடுமுறை நாளில் பண்டிகையை கொண்ட முடியாத அளவிற்கு தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு திமுக எம் பி சு வெங்கடேசன் தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 13 ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா பதில் அளித்துள்ளது. இதை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்த எம்பி சு.வெங்கடேசன் மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.