தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆக இருக்கிறார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகம் செய்து வருகிறார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் முழுமையாக அரசியலில் மட்டும் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பிளாக் ஷீப் என்ற youtube சேனலை வாங்கினார். இந்த யூடியூப் சேனல் தற்போது தொலைக்காட்சியாக மாறியுள்ள நிலையில், பிளாக் ஷீப் ஒடிடிக்காக புதிய படங்களை வாங்கும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இந்த தொலைக்காட்சியில் சில பழைய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது சில புதிய திரைப்படங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 2000 கோடி முதலீடு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.