தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு அடுத்த மாதம் ஜூலையில் நடைபெற இருக்கும் நிலையில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 25ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும் நிலையில் தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுபோக செய்முறை தேர்வுக்கான தேதியை தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகுவதன் மூலம் ‌ தனித்தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஹால் டிக்கெட் இல்லாதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்காது என்பதால் உரிய முறையில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.