தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் பல படங்களில் நடித்து வந்த நிலையில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இவர் கடைசியாக நடிகர் விஜயுடன் சேர்ந்து லியோ என்ற படத்தில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதோடு இவர் நடிகர் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் போது த்ரிஷாவுக்கு சிரஞ்சீவியின் வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு வருவதாக தெலுங்கு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.