பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து தமிழக மக்களின் மனங்களை கவர்ந்தார் மலையாள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி.இவர் மாயநதி (2017), வரதன் (2018), விஜய் சூப்பரும் பௌர்ணமியும் (2019), அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு (2019) போன்ற படங்களில் பிரபலமானார். ஆக்சன் (2019) என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஜகமே தந்திரம் (2021) படத்தில் நடித்தார். இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் நடிகர் அர்ஜூன் தாஸூடன் காதலில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அர்ஜுன் தாஸுடன் எடுத்த படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த ஐஸ்வர்யா, ஹார்ட் ஸ்மைலியையும் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் காதலில் உள்ளனரா (அ) இணைந்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.