செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்படம் தயாரிக்க தனியார் டிவி நிறுவனத்திடம் ரூ.1.70 கோடி கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார், பல முறை கேட்டும் பணத்தை தராததால் அவர் மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கோர்ட் உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.