தமிழ்நாடு BJP கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டதாக காயத்ரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காயத்ரி நிரந்தரமாக நீங்க விரும்பியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை தான் அப்பா போல் பார்த்தேன் என பாஜகவில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நடிகை காய்த்ரி ரகுராம் ட்விட்டரில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். “ஆபாசம் பேச்சாளரின் ராஜின னாமா இன்னும் ஏற்கப்படவில்லை. பெண்ணைப் பற்றி தவறாக பேசும் ஒரு தலைவருக்கு Z வகை பாதுகாப்பு. சூப்பர் மோடி அவர்களே, அனைத்திற்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். மேலும், காய்த்ரி ரகுராம் விசிகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.