பிரபல விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் 100 நாட்களை கடந்து விட்டது. பிக் பாஸில் பணப்பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஆரம்பத் தொகையான 3 லட்ச ரூபாயை கதிர் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவர் தான் வின்னர் மற்றும் ரன்னராக வருவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி தொல். திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தம்பி விக்ரமனை வெற்றி பெற செய்வோம். பிக் பாஸ் போட்டியில் டிஸ்னி பிளஸ் ஆப் மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம் வெல்லும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகி வருகிறது.
தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். #பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் @DisneyPlusID app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம்.#அறம்வெல்லும்.@RVikraman #BiggBoss16 pic.twitter.com/aRgLaChoJ6
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 18, 2023