மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் துபாயில் வைத்து நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் தன் மீது எந்த குற்றங்களும் இல்லை என்று நிவின் பாலி கூறினார்.
அதோடு அந்தப் பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய அதே நாளில் நிவின் பாலி ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள கொச்சியில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தூக்கத்தில் தேதியை மறந்து சொல்லிவிட்டதாக கூறினார். இந்நிலையில் தற்போது சிறப்பு புலனாய்வு குழு நடிகர் நிவின்பாலியிடம் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் புகாரின் பின்னணியில் சதி இருப்பதாக நிவின்பாலி கூறுகின்ற நிலையில் அது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.