மதுரையில் 12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்யா எனும் மாணவி திடீரென வயிற்று வலியால் துடித்த நிலையில், பெற்றோர் அவசரமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தது. போலீசார் மாணவியை விசாரித்ததில், கண்ணனேந்தல் பகுதியிலுள்ள ஒரு தனியார் கோயில் பூசாரியே இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என கூறியுள்ளார். 48 வயதான அந்த பூசாரி, மாணவியின் வறுமையை பயன்படுத்தி படிப்புக்குத் துணை செய்வதாகக் கூறி மாணவியை கோயிலுக்குள் அழைத்துள்ளார்.
விடுமுறை நாட்களில் கோயிலுக்குச் சென்ற மாணவியிடம் கோயிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வைத்துள்ளார். மேலும், தனியாக இருக்கும் போது அதிக மதிப்பெண் பெற சிறப்பு பூஜை செய்வதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் பல பெண்கள் மற்றும் மாணவிகளுடனும் சில்மிஷம் செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். .