
மணிரத்தினம் இயக்கத்தில் பிரபல நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முத்த மழை என்ற பாடலை தமிழில் தீயும், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சின்மயியும் பாடியுள்ளனர். சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடந்த போது முத்தமழை தமிழ் பாடலை சின்மயி பாடினார்.
இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழிலும் சின்மயியை பாட வைத்திருக்கலாம் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சின்மயி கூறியதாவது, இசை வெளியீட்டு விழா அன்று தீ இல்லாததால் அந்த பாடலை நான் பாடினேன். எனக்கு கிடைத்த வரவேற்பை நம்ப முடியவில்லை.
ஆச்சரியமாக உள்ளது. எனது 20 வயதில் முத்தமழை பாடலை இவ்வாறு பாடி இருக்க முடியாது. பாடகி தனி குரல் வளம் மிக்கவர். இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஸ்ரேயா கோஷல்களை விழுங்கலாம். எங்களுக்குள் எந்த போட்டிகளில் இல்லை. பாடகி தீயையும் என்னையும் ஒப்பிடாதீர்கள் என கூறியுள்ளார்.