கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இன கலவரம் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். அறுபதாயிரம் பேர் இடம் பெயர்ந்தனர். மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மணிப்பூரில் உள்ள மைத்தேயி இனத்துக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கும் படி கூறிய மாநில உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கு பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்த போது மோதல் வெடித்தது. அந்த மோதல் வன்முறையாக வெடித்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மைத்தேயி-குக்கி சமூகத்தினர் இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது. சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூறியதாவது, அம்பேத்கர் அவர்களை பற்றி யோசிக்கும் போது கண்டிப்பா சட்டம் ஒழுங்கு, சமூகநீதி யோசிக்காமல் இருக்கவே முடியாது. இன்னைக்கும் மணிப்பூர்ல என்ன நடக்குதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கண்டுக்கவே கண்டுக்காம ஒரு அரசு மேல இருந்து நம்மை ஆட்சி செய்கிறது என விமர்சித்துள்ளார்.