ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் தனி கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனிடம் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசி அதிமுக கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு சம்மதம் வாங்கியுள்ளது. அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த முறை யாருக்கும் ஆதரவு கொடுக்கப் போவது கிடையாது என்று அதிரடியாக அறிவித்ததுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு என்று பாஜகவை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக பேச இருக்கிறார்கள்.
இந்நிலையில் பாமக அதிமுக கூட்டணியில் இல்லை என்பது தற்போது தெரிந்து விட்டதன் காரணமாக பாஜகவின் ஆதரவு அதிமுகவில் யாருக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி இந்த இடைத்தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி என்பது பாஜகவுக்கு மிக முக்கிய தேவை. இதனால் அதிமுக கூட்டணியை பாஜக பகைத்துக் கொள்ளாது என்று தான் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரில் பாஜக யாருக்கு ஆதரவு கொடுக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு இடைத்தேர்தலில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் ஒருவேளை பாஜக ஆதரவு கொடுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகி விடலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.