வளைகுடா பகுதியில் ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்தாவது கடற்படை தளம் (US Fifth Fleet) மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகள் மற்றும் தற்கொலைப்படை ட்ரோன்களை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த அதிவேகத் தாக்குதலில், கடற்படை தளத்தில் இருந்த பிரம்மாண்ட எரிபொருள் கிடங்கு (Fuel Depot) குண்டுவெடித்து தீப்பற்றி எரிந்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலால் பஹ்ரைன் முழுவதும் பெரும் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.
மேலும், அமெரிக்க ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க ராணுவ நிலைகளுக்கு எதிரான தங்களின் தாக்குதல்கள் வரும் நாட்களிலும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் ஈரான் ராணுவம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த மெகா தாக்குதல் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் எந்நேரமும் பெரும் போர் வெடிக்கும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன.
