நாடு முழுவதும் 2004ம் வருடத்திற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் என்பது கிடையாது உள்ளிட்ட பாதகமான சூழல் ஏற்பட்டதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையின் அடிப்படையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ,ஜார்கண்ட், பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பழைய ஓய்வூதி திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதி திட்டம் அமல்படுத்தப்பட்டால் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதை வெளியிட்டுள்ளது. அதாவது நாட்டில் மீண்டும் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் நிதியில் கடுமையான அழுத்தம் உண்டாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அடுத்த 2040 ஆம் வருடத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருடத்திற்கு 0.1% மட்டுமே ஓய்வூதிய செலவீனத்தில் சேமிக்க முடியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் ஓய்வூதியத்திற்காக அதிகம் செலவிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புதிய ஓய்வூதிய திட்டத்தை காட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் 4.5 சதவீதம் கூடுதல் நிதி சுமை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.