அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் ஆரம்பப் பள்ளி ஆசிரியை ஒருவர், 16 வயதுடைய உயர்நிலைப் பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், அந்த ஆசிரியையின் கணவர் அவரது மொபைல் போனில் இருந்த சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகளைக் கண்டுபிடித்த பிறகு வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும் உடனே அவரது கணவர் இதுகுறித்து காவல் துறையினருக்குப் புகார் அளித்து, இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜிபிஎஸ் இருப்பிடத் தரவுகள் மற்றும் மொபைல் ஆதாரங்கள் மூலம் அந்த ஆசிரியை மாணவருடன் சட்டவிரோதமாகத் தொடர்பில் இருந்தது உறுதியானது.

இந்த அழுத்தமான ஆதாரங்களின் அடிப்படையில், மைனர் மாணவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கணவரின் விழிப்புணர்வாலும், ஜிபிஎஸ் தொழில்நுட்ப ஆதாரங்களாலும் இந்த ஆசிரியை தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.