தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தன் படங்களில் விலங்குகளை நெருக்கமாக காட்சிப்படுத்துவார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி என்ற நாய் மிகவும் பிரபலமாக இருந்தது. இதேப் போன்று கர்ணன் திரைப்படத்தில் கழுதையையும், மாமன்னன் படத்தில் குதிரை மற்றும் பன்றியையும், வாழைப்படத்தில் மாட்டையும் பயன்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் பரியேறும் படத்தில் நடித்த அந்த நாய் சிப்பிப்பாறை வகையைச் சேர்ந்தது. இந்நிலையில் தற்போது இந்த நாய் உயிரிழந்துவிட்டது. இதன் இறுதிச் சடங்கில் படத்தில் நடித்த விஜயமுத்து என்பவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்த நாய் ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளது. மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.