சிக்கிம் சட்டசபை தேர்தலில் கிராந்திகாரி மோட்சா கட்சி அமோகமாக வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சியை தக்க வைத்தது. இந்த கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமங் மீண்டும் முதல்  மந்திரியாக பதவியேற்றார் .இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி ராய் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இந்த தொகுதியில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் விமல் ராயை தோற்கடித்தார். நேற்று சட்டசபையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் குமரி ராய் எம்எல்ஏ பதவியேற்ற நிலையில் திடீரென்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.