திருவாடானை அருகே இருக்கும் ஒரு ஊரில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். தினமும் இவர் வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு நாள் டிரைவர் முகமது அஜித் ரகுமான் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அதை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் முகமது அஜித் மாணவியை மிரட்டி உனது உறவினர்களுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி விடுவேன், எனக்கு மூன்று லட்ச ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் அச்சத்தில் சிறுமி வீட்டில் இருந்து 6 1/2 பவுன் தங்க நயையை எடுத்து முகமது அஜித்திடம் கொடுத்துள்ளார். அதனை அடகு வைத்து முகமது அஜித் பணத்தை பெற்றுக் கொண்டார். வீட்டில் இருந்த நகை காணாமல் போனதால் மனைவியின் தாய் தனது மகளிடம் கேட்டுள்ளார். அப்போது மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகமது அஜித்தை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.