ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன படையப்பா படத்தில் கதாநாயகியாக முதலில் நக்மாவைத்தான் படக்குழு புக் செய்திருந்தது. ஏற்கனவே ரஜினியும், நக்மாவும் பாட்ஷாவின் இணைந்து நடித்து ஹிட் ஜோடி என்று பெயர் எடுத்திருந்தார்கள். எனவே இதிலும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

ஆனால் சில காரணங்களால் படத்திலிருந்து நக்மா வெளியேறிவிட்டார். தற்போது படையப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் நக்மா, ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.