வத்தி குச்சி என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் பிரபல நடிகை வனிதா  அவருடைய மகள் ஜோவிகா பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டாஸ்க் விளையாட தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் மற்றொரு போட்டியாளரான விசித்ராவிடம், படிப்பு குறித்து ஜோவிகா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜோவிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வந்த நிலையில், “படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல” என்று சொன்னதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் படிப்பு முக்கியம் என்ற விசித்ராவின் கருத்தில் எந்த தவறுமில்லை எனவும் கூறி வருகிறார்கள்.