திரை உலகின் பிரபல நடிகர் ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராம்சரண் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் படத்தைப் பார்த்த சிலர் படம் தொடர்பான தங்கள் கருத்துக்களை எக்ஸ் வலைதளம் மூலமாக பகிர்ந்துள்ளனர். படம் பக்கா மாஸ் கமர்சியல் படம். கதை பரபரப்பாக செல்கிறது என்றும் படத்தில் ராம்சரனின் நடிப்பு அருமை, கேம் சேஞ்சர் படத்திற்கு ராம் சரணுக்கு தேசிய விருது வழங்கலாம்.

அந்த அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று நடிகை அஞ்சலியும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார் என்று படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.