பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் போன்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதோடு, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. துணிவு திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், வட அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பின்படி 8.16 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அங்கு படத்தை வெளியிட்ட சரிகமப சினிமாஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதேபோன்று துணிவு திரைப்படத்துடன் வெளியான நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் 210 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் எச். வினோத் பாக்ஸ் ஆபீஸில் விளையாட்டிற்காக தயாரிப்பாளர்களே தற்போது பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்று அதிரடியான ஒரு கருத்தை கூறியுள்ளார். மேலும் எச். வினோத்தின் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.