பாலிவுட் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு அறிமுகமான சமீரா ரெட்டி தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் அஜித்தின் அசல் மற்றும் விஷாலின் வெடி போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி கடந்த 2014-ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றபோது அந்த இயக்குனர் என் மார்பகங்களை பெரிதாக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு என் மார்பகங்களை பெரிதாக காட்டுவதற்கு சில முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால் அந்த முயற்சிகளை கூட எடுத்து இருக்கக் கூடாது என்று தற்போது நினைக்கிறேன். ஆனால் அந்த இயக்குனர் மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் என்று தொடர்ந்து என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் பாலிவுட் சினிமா பற்றி நடிகை சமீரா ரெட்டி கூறிய அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.