2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகும் நோட்டுகளை   மாற்றிக் கொள்ள முடியும் என்று ஆர்பி அறிவித்துள்ளது. ஆனால் வழக்கம் போல அனைத்து வங்கிகளிலும் மாற்ற முடியாது. அதற்கென்று சில வழிமுறைகளை RBI வெளியிட்டுள்ளது. அக்டோபர் ஏழாம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்க  நோட்டுகளாகவே  தொடரும்.

ஆனால் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே இந்த நோட்டுகளை வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும். தபால் மூலமாகவும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுக்களை பொதுமக்கள் அனுப்பி மாற்றி கொள்ளலாம். ஆனால் பிற வங்கி கிளைகளில் வைப்போ அல்லது மாற்றிக் கொள்ளவும் முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.