கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி டவுனில் தனுஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 23 வயது ஆகிறது. தனுஜாவுக்கு டாக்டராக வேண்டும் என்று ஆசை இருந்தது. இவர் பெங்களூரில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். கர்நாடக அரசின் பொது நுழைவுத் தேர்வை எழுதி இரண்டு முறை குறைந்த மதிப்பெண் மட்டுமே எடுத்தார். இதனால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காமல் போனது. நேற்று பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான கலபுரகிக்கு ரயிலில் சென்றார்.

இந்த நிலையில் அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கா அருகே சென்று கொண்டிருந்தபோது தனுஜா தனது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது கனவு நிறைவேறாததால் உயிரை விட போகிறேன் எனக் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார் சிறிது நேரத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார். இதனைக் கேட்டு பதறிப் போன பெற்றோர் கண்ணீருடன் கிளம்பி வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.