ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த கோவிலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தின் போது லட்டுவில் நெய் கலப்படம் கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது லட்டுவில் கலக்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட விலங்கின் கொழுப்புகள் கலக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்குமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கலப்பட நெய் வழங்கிய தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அபூர்வ சால்டா, ராஜசேகரன், பொமில் ஜெயின் மற்றும் விபின் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.