சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் பெயரில் மூக்கு வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. மூக்கின் வழி செலுத்தப்படும் கொரோனா மருந்து அறிமுகப்படுத்தப்படுவது உலகத்தில் இதுவே முதல் முறையாகும். இந்த தடுப்பூசி, மத்திய அரசின் சார்பில் 325 ரூபாய் விலையிலும், தனியார் தடுப்பூசி மையங்களில் 800 ரூபாய் விலையிலும் கிடைக்கும். இந்த தடுப்பூசி நாடு முழுவதும் வரும் 23ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.