மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியில் கிருபாஸ்டின் (22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று அவரது நண்பருடன் பி.எஸ்‌என்.எல் ரவுண்டானா பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியில் வந்தனர். அப்போது அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அதன்பின் காவல்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி கிருபாஸ்டினை பிடித்தனர். ஆனால் அவருடைய நண்பர் தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த ஆயுதத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கிருபாஸ்டின் எதற்காக கத்தியுடன் அப்பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்தார் எனவும் இவரது நண்பரைப் பற்றியும் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.