செம்ஸிகோ நாட்டில் உள்நாட்டு விமானம் ஒன்று எல்பாஜியோவில் இருந்து டிஜுவானாவுக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணி விமானத்தை கடத்த முயன்றார். அந்த நபர் விமானியை கட்டாயப்படுத்தி விமானத்தை அமெரிக்காவிற்கு இயக்கி சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தில் இருந்த ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்த பயணியை கட்டுப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து மத்திய மெக்கோவில் உள்ள குவாடலஜாராவுக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது. விமானம் தரை இறங்கியவுடன் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அந்த நபர் விமானத்தை கடத்த முயன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து பயணிகளும் விமான பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். மீதமுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டு அவர்களது இறுதி இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்தனர் என தெரிவிக்கப்பட்டது.