தமிழ் சினிமாவில் கம்பீரம், சகியே, முத்திரை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் ராக்கி சாவந்த் இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக உள்ளார். இதனிடையே இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். கடந்த 2019-ல் ரித்தேஷ் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களில் பிரிந்தார் ராக்கி சாவந்த். இதையடுத்து அதில் கான் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளத்தில் தெரிவித்து திருமண புகைப்படங்களை வெளியிட்டார். இப்போது அதில் கான் துரானி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன் நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்வதாகவும் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இதற்கிடையில் ராக்கி சாவந்துக்கும் பிரபல இந்தி நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கும் அண்மையில் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தரக்குறைவாக மற்றும் ஆபாசமாக பேசினர். இதனால் ஷெர்லின் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி ராக்கி சாவந்த்தை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இருவரும் தற்போது சமரசமாகி ஒன்று சேர்ந்துள்ளனர். அதே நேரம் ஷெர்லின் சோப்ராவிடம் ராக்கி சாவந்த் மன்னிப்புகேட்டுள்ளார். அதோடு இருவரும் கட்டிப்பிடித்து நண்பர்களான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.