தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இவர் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திரிஷாவின் பள்ளி பருவ புகைப்படம் மற்றும் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது. அவ்வகையில் திரிஷாவின் மூன்றாம் வகுப்பு ரிப்போர்ட் கார்டு புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் குழந்தையாக உள்ளார். அது பழைய போட்டோ என்றாலும் அதை பார்த்து ரசிகர்கள் திரிஷா அப்பவே இவ்வளவு க்யூட்டா இருக்கிறார் என கமெண்ட் செய்து அந்த புகைப்படத்தை வைராக்கி வருகிறார்கள்.