தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதேபோன்று பிரபல நடிகர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படமும் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்தது.

முன்னதாக நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சியை திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி ஏப்ரல் 10-ல் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இட்லி கடை மற்றும் குட் பேட் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அஜித் படத்துக்கு வழிவிட்டு தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார். அதன்படி இந்த படம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு புதிய தேதியை அறிவித்துள்ளது.