மக்களவைத் தேர்தல் குறித்து பரவும் தவறான தகவல்களை சரிபார்க்க மித் வெர்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டர் என்ற புதிய வலைத்தளத்தை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தவறான தகவல்கள் அதிகம் பரவி வரும் இச்சூழலில் தேர்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை வாக்காளர்கள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்த இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது