தமிழ் சினிமாவில் முன்னணி நாயகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய ரோல் மாடல் நடிகர் கமல்ஹாசன் தான் என்று கூறியுள்ளார். இது குறித்து சூர்யா கூறியதாவது, கமல் சார் சந்தைக்கான படங்களையும் தருவார்.
பரிசோதனைக்காண முயற்சிகளையும் தொடர்வார். தோல்வியால் ஒருபோதும் துவண்டு போக மாட்டார். பெரிய தோல்வி படத்தை கொடுத்திருப்பார். ஆனால் அடுத்து வரும்போது இன்னும் பெரிய படத்துடன் தான் வருவார். அதுவும் ஒரு பாதுகாப்பான படமாக இருக்காது என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். மேலும் நடிகர் சூர்யா கமல் பற்றி சொன்னது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.