தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்புகளுக்காக நடிகர் அல்லு அர்ஜுன் நிவாரண உதவி வழங்கியுள்ளார். அதன்படி அவர் ரூ.25 லட்சம் நிவாரண உதவியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் கடந்த 29ஆம் தேதி வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 357 பேர் வரை உயிரிழந்து உள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.