விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவர் மிகவும் ஆவேசமாக திமுகவுக்கு சவால் விடும் ஒரு வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் பேசியதாவது, திருமாவளவன் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர். திமுகவுக்கு தைரியம் இருந்தால், துணிச்சல் இருந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விசிக தேவையில்லை என்று சொல்லட்டு பார்ப்போம். எந்த கொம்பனாலும் அப்படி சொல்ல முடியாது.

2026 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் யாருடன் கூட்டணியில் இருக்கிறாரோ அவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர். தமிழ்நாட்டில் திமுக கொடி பறக்காத இடத்தில் கூட இந்த விடுதலை சிறுத்தைகள் கொடி பறந்து கொண்டிருக்கிறது. மேலும் தைரியம் இருந்தால், திராணி இருந்தால், தெம்பு இருந்தால் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக விசிக உடன் கூட்டணி கிடையாது என்று சொல்லட்டும் பார்ப்போம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.