சமீபகாலமாகவே ஒரு நாள் லாட்டரி சீட்டு வாங்கி பலரும் கோடீஸ்வரர் மற்றும் லட்சாதிபதி ஆவதை செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி பஞ்சாப்பை சேர்ந்த பாயல் என்ற 42 வயது பெண் ஒருவர் என்ற லாட்டரி டிக்கெட் மூலமாக ஒரு மில்லியன் டாலரை அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8.33 கோடி ரூபாய் பரிசாக பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் 20ம் தேதி அந்த பெண் அவருடைய 16 வது திருமண நாளை முன்னிட்டு கணவர் கொடுத்த பணத்தை வைத்து ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வரும் அவருக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் இந்த முறை ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் மூலம் கிடைத்துள்ளது.