பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருந்தது. இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தார்.

தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  தொடர்ந்து, தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், என்னை அழைத்தால் திமுக, விசிக-வில் இணைய தயார் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.