தமிழ்நாடு பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரம் தொடர்பாக பேசியதால் ஆறு மாதம் கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீங்குவதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக பணியாற்ற விடுவதாக உறுதியளித்தால் அதிமுக, திமுக, விசிக, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சி அழைத்தாலும் நான் இணைய ரெடி என்று நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு திமுகவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விரைவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.